மூக்கையா தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அமைச்சர்கள்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான மூக்கையா தேவர் அவர்களின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு உசிலம்பட்டியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திமுகவின் சார்பில் இன்று (செப்.6) மாலை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திார்கள். உடன் சேடப்பட்டி மணிமாறன், பூமிநாதன் எம்எல்ஏ மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
Next Story




