காங்கேயம் காவலர் குடியிருப்பில் ‘காவலர் தினம்’ கொண்டாட்டம் - விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள்  வழங்கிய ஏ.எஸ்.பி.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவலர் குடியிருப்பில்  ‘காவலர் தினம்’ கொண்டாட்டம் - விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கிய ஏ.எஸ்.பி.
தமிழகத்தில் நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட நாளான இன்று ‘காவலர் தினம்’ முதல் முறையாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மாவட்டம் காங்கேயம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட காங்கேயம்,வெள்ளகோவில்,ஊதியூர்,ஊத்துக்குளி, காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் ஆகியவைகளில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகள் காவலர்குடியிருப்பில் நடைபெற்றது. போட்டிகளை காங்கேயம் காவல் நிலையம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த போட்டியை காங்கேயம் காவல் உட்கோட்ட ஏ.எஸ்.பி. அர்பிதா ராஜ்புட் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் முன்னிலையில் நடைபெற்றது. சிறுவர் சிறுமிகளுக்கு சாக்கு போட்டி,லெமன் ஸ்பூன், ஓட்டப்பந்தயம் , பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உட்பட ஏராளமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் காவலர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கும் விளையாட்டு போட்டிகள், அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள்,காவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டுகளித்தனர்
Next Story