காங்கேயத்தில் பொருளாதார வளர்ச்சி குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி

X
காங்கேயத்தில் உள்ள ஸ்ரீ ராம்சந்த்ர மிஷன் அலுவலக வளாகத்தில், காங்கேயம் ஹார்ட் ஃபுல்னெஸ் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் காங்கேயம் மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர். எஸ்.கே.செந்தில்குமார் தலைமை வகித்தார். அன்றாடும் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளித்து, மன நிம்மதி, மன மகிழ்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி என தொடர் வெற்றி பெறும் யுக்திகளை கற்றுக் கொள்ளும் பொருட்டு நடைபெற்ற இப் பயிற்சி முகாமில், காங்கேயம் உழவர் அமைப்பு நிர்வாகி குமாரசாமி, ஹார்ட் ஃபுல்னெஸ் அமைப்பின் திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரவிசுப்பையன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். மேலும், ஹார்ட் ஃபுல்னெஸ் அமைப்பின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர் எஸ்.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, ஹார்ட் ஃபுல்னஸ் பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து, பயோகரியை (Bio Char) விவசாய நிலங்களில் பயன்படுத்தி,மண்ணின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த செயல் விளக்கமும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் நிறைவில், சிறப்பான முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இதில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

