அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஓடுக்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஓடுக்கப்படும்
X
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஓடுக்கப்படும் என பார்சன்ஸ் கோர்ட் ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் உறுதியளித்தார்...
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரவுடிகளின் ராஜ்ஜியம் ஒடுக்கப்படும் என்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார். "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்திற்காக திண்டுக்கல் வந்திருக்கும் அவர்,அங்குள்ள தனியார் விடுதியில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களது கோரிக்கைகளை கேட்ட பின், பின்னர் நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ்,தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள். எதிர்காலத்தில் எந்த அளவுக்கு முடியுமோ அதை செய்து தருகிறோம். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன்,எஞ்சிய ஏரி குளங்கள் தூர் வரப்படும். வன்னிய கிறிஸ்வதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை, அரசு அமைந்தவுடன் பரீசிலிக்கப்படும். தோல் தொழிற்சாலை உரிமையாளர்கள் வைத்த மின்சாரம் மற்றும் வரி உயர்வு பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுடன் பேசி தீர்வு காணப்படும். அதிமுக ஆட்சிகள் ரவுடிகள் கலாச்சாரம் ஓடுக்கப்பட்டது. பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடினர். போதைப் பொருள் புழக்கம் அதிகமாக இருப்பதால், ரவுடிகள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் தாக்குல் நடத்துகிறார்கள். அதிமுக ஆட்சி வந்தவுடன் ரவுடி ராஜ்ஜியம் ஒடுக்கப்படும் என்று இபிஎஸ் உறுதி அளித்தார்.
Next Story