ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி பெருமாள் வருஷாபிஷேக விழா

ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி பெருமாள் வருஷாபிஷேக விழா
X
கோவில்பட்டி அருகே கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் ஸ்ரீ செளந்தர்ய பத்மாவதி ஸ்ரீ கோதா சமேத ஶ்ரீ மகா ஸ்ரீ சீனிவாசகம் பெருமாள் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பள்ளியெழுச்சி பூஜையும் நித்திய பூஜையும் நடைபெற்றது காலை 6.30 மணிக்கு கணபதி பூஜை சங்கல்பம் புன்னியாக வாசனம் கும்ப பூஜை கணபதி ஹோமம் அம்பாள் மூலமந்திர ஹோமம் புர்ணாஷுதி தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்டுள்ள கடம் மேல தாளம் மூழங்க கோவிலை மூன்று முறை வலம் வந்து புனித நீரால் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாளுக்கு ஸ்ரீ சௌந்தர்யா பத்மாவதி மற்றும் ஆண்டாள் நாச்சியாருக்கு பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது அதைத் தொடர்ந்து மூலவர் ஸ்ரீ மகா ஸ்ரீனிவாச பெருமாள் மஞ்சள் பொடி மாபொடி திரவியம் பால் தயிர் இளநீர் தேன் சந்தனம் வாசனை உட்பட 21 திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மஹா தீபாராதனை திருக்குறுங்குடி திரு ஜீயர் மடம் மடாதிபதி ஐம்பதாவது பட்டம் ஸ்ரீமத் பரமஹம்ஸ் ஸ்ரீ ஸ்ரீ பேரருளான ராமானுஜர் சுவாமிகள் தலைமையில் விழா நடைபெற்றது இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் நிறைவாக பிரசாதம் வழங்கப்பட்டது
Next Story