தஞ்சாவூர் சாலை விபத்து: மாமன்ற முன்னாள் உறுப்பினர் உயிரிழப்பு

X
தஞ்சாவூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். தஞ்சாவூர் பாத்திமா நகரைச் சேர்ந்த ஜி.அருளழகன் (49). இவர் 2011-16 ஆம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினராக இருந்தார். தற்போது அமமுக மாநகர் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலராக இருந்து வந்தார். இவர் காரில் ஆற்றுப்பாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியிலுள்ள சாலை நடுத்தடுப்பில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், பலத்த காயமடைந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அருளழகன் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story

