குமரியில் காவலர் தின விழா

குமரியில் காவலர் தின விழா
X
நாகர்கோவில்
குமரியில் நேற்று (6ம் தேதி) காவலர்கள் தினம் கடைபிடிக்கப் பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக உள்ள நினைவு ஸ்தூபியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. எஸ்பி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் எஸ்.பி. தலைமையில் போலீசார் வீரவணக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி மதியழகன், ஏ.எஸ். பி. லலித் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து கண்காட்சி நடந்தது. பின்னர் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
Next Story