வாணியம்பாடியில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிகாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதம் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் மர சாமான்கள் மற்றும் பர்னிச்சர் செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தேக்கு மரங்கள், இயந்திரங்கள் எறிந்து மாசமாகியுள்ளது. தகவலின் பெயரில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மரக்கடையில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்தது. இதில் கடையில் வைக்கப்பட்டிருந்த பர்னிச்சர் பொருட்கள், சோபாக்கள், தேக்கு மரங்கள், மரச்சாமான்கள் செய்யும் இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் உட்பட சுமார் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் தீயில் எரிந்துள்ளது. வாணியம்பாடியில் வேறு பகுதியில் இவரது மர சாமான்களுக்கான பர்னிச்சர் கடை இயங்கி வந்த நிலையில் தற்போது பர்னிச்சர்கள் செய்வதற்காக தேக்கு மரங்கள் உள்ளிட்ட மரங்களுடன் புதிதாக இப்பகுதியில் கடையை திறந்து 15 நாட்களாக நிலையிலலும் இணைப்பு கூட கொடுக்காத நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்திற்கு மர்ம நபர்கள் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தீயணைப்புத் துறையினர் மற்றும் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



