கரூருக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக நிதி வழங்கியவர் மு க ஸ்டாலின்.செந்தில் பாலாஜி விளக்கம்.

கரூருக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக நிதி வழங்கியவர் மு க ஸ்டாலின்.செந்தில் பாலாஜி விளக்கம்.
கரூருக்கு கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக நிதி வழங்கியவர் மு க ஸ்டாலின்.செந்தில் பாலாஜி விளக்கம். நேற்று மாலை அட்லஸ் கலையரங்கில் ஆசிரியர் தின விழாவில் சிறப்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,கரூர் மாவட்டத்தில் ரூபாய் 23 கோடியில் 113 வகுப்பறைகள் , ரூபாய் இரண்டரை கோடி மதிப்பீட்டில் 24 பள்ளிகளில் கழிப்பறை கட்டிடங்கள்,ரூபாய் 86 லட்சம் மதிப்பீட்டில் 16 பள்ளிகளில் சமையலறை கட்டிடங்கள் ,ரூபாய் ஒரு கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் 17 பள்ளிகளில் சுற்றுச்சுவர்கள், ரூபாய் 8 கோடியில் 69 பள்ளிகளை சேர்ந்த 22,831 மாணாக்கர்களுக்கு மிதிவண்டிகள் , ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 693 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் போன்றவை இந்த நான்காண்டு காலத்தில் அமைப்பதற்கு தேவையான நிதியை தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளார். கல்வியின் தரத்தை மேம்படுத்த மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்திற்கு அதிகப்படியான நிதியை வழங்கியவர் தான் நமது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Next Story