தேர்தல் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்

தேர்தல் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
X
மதுரை வாடிப்பட்டியில் தேர்தல் குறித்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் 1200 க்கு மேல் வாக்காளர்கள் உள்ள வாக்காளர் பட்டியலை பிரித்து புதிய வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச் சாவடி மையங்கள் அமைப்பது தொடர்பாக அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று ( செப்.7)நடந்தது. இந்த கூட்டத்திற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story