பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

மதுரை மேலூரில் காமாட்சி அம்மன் கோவில் விழாவில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர்
மதுரை மேலூர் பேருந்து நிலையம் அருகே விஸ்வகர்மா சமுதாயத்தினரின் அருள்மிகு ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு 47 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். பாரம்பரிய வழக்கப்படி சக்திகரகத்தை கோவில்பூசாரி ஊர்வலத்தில் எடுத்து வந்தார். மந்தை திடலில் இருந்து புறப்பட்டு அழகர்கோயில் ரோடு , நகைக்கடை பஜார், பெரியகடை வீதி, செக்கடி பஜார் வழியாக கோவிலுக்கு ஊர்வலம் வந்தது. பாலாபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார். மேலூர் தாலுகா அளவில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அன்னதானம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Next Story