ரேக்ளா போட்டியை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் தங்கமணி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்த குதிரைகள்

குமாரபாளையத்தில் ரேக்ளா போட்டியை முன்னாள் அமைச்சர் தங்கமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குமாரபாளையம், பவானி குதிரை வண்டி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் 11ம் ஆண்டு ரேக்ளா எல்லை பந்தயம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆட்டோ ஸ்டாண்ட் மற்றும் ரேக்ளா பந்தய குழு தலைவர், நாமக்கல் மவக்ட்ட குதிரை ரேக்ளா சங்க தலைவர் சிங்காரவேல் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்,ஏ,வுமான தங்கமணி பங்கேற்று கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். இந்த போட்டிகள் உள்ளூர் குதிரை, புதிய குதிரையில் இரு அணிகள், 43 இன்ச் குதிரை, 45 இன்ச் குதிரை, பெரிய குதிரை என 6 பிரிவுகளில் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் அறுதல் பரிசு என வழங்கப்பட்டது. பரிசாக ரொக்கப்பரிசு மற்றும் கோப்பைகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, அ.தி.மு.க. நகர செயலர் பாலசுப்ரமணி , மாநில குதிரை வளர்ப்போர் சங்கம், சேலம் குதிரை ரேக்ளா சங்க தலைவர், மாநில ரேக்ளா சாரதிகள் சங்க தலைவர் சந்திரன் உள்பட பலர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் உள்ளூர் குதிரை பிரிவில் ராசிபுரம் பால்ராஜ், குதிரை முதலிடமும், பவானி வேலு குதிரை இரண்டாமிடமும், ஈரோடு குறிஞ்சி ஜெயச்சந்திரன் குதிரை மூன்றாமிடமும், ஈரோடு கரிகாலன் குதிரை நன்காமிடமும் பெற்றது. புதிய குதிரை முதல் பிரிவில் எஸ்.பி.எம் பிரதர்ஸ் குதிரை , குமாரபாளையம் வெங்கிடு குதிரை, பவானி விநாயக ஆம்புலன்ஸ் குதிரை, காட்டூர் சதீஷ் நினைவு குதிரை முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பெற்று சாதனை படைத்தது. புதிய குதிரை இரண்டாவது பிரிவில் குமாரபாளையம் சிங்காரவேலன் குதிரை, குளித்தலை மனோகர் குதிரை, சேலம் வெண்ணங்குடி ரவி குதிரை, குமாரபாளையம் சிங்காரவேல் ஆனந்த் குதிரை முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பெற்று சாதனை படைத்தது. 43 இன்ச் குதிரை பிரிவில் குளித்தலை மனோகர், சேலம் கவுதம், காட்டூர் சதீஷ், பவானி மணி குதிரைகள் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பெற்று சாதனை படைத்தது. . 45 இன்ச் குதிரை பிரிவில் குமாரபாளையம் சிங்காரவேல், ராம்நாடு தேவர் மகன் சத்யா குதிரை, குமாரபாளையம் பாஸ்கர் சிங்காரவேல் குதிரை, குளித்தலை பனையடி கருப்பு குதிரை முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடம் பெற்று சாதனை படைத்தது.
Next Story