மணி மண்டபம் அமையும் இடத்தினை ஆய்வு செய்த அமைச்சர்கள்
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான மூக்கையா தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முத்வர் ஸ்டாலின் சட்டசபையில் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்ட அறிவித்து இருந்தார், அதற்கேற்ப மணிமண்டபம் அமைப்பதற்காக உசிலம்பட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை நேற்று (செப்.6) இரவு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஏ.வ வேலு அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் .உடன் சேடப்பட்டி மணிமாறன், பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் இருந்தனர்.
Next Story




