குறளிசைக் காவியம் படைத்த லிடியன் நாதஸ்வரனுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

X
இது குறித்து இன்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பதின் பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள் வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள உடன்பிறப்புகள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்! இசையில் தோய்ந்து பல திறமை மிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும்! குறளிசைக் காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலை பெற்றிட வேண்டும்! என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Next Story

