தி.மு.க-வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நைனார் நாகேந்திரன் வலியுறுத்தல்

தி.மு.க-வை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நைனார் நாகேந்திரன் வலியுறுத்தல்
X
அமித்ஷாவை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் தினகரன் – பா.ஜ.க தலைவர் குற்றச்சாட்டு
கோவை ஈச்சனாரியில் நடைபெற்ற பா.ஜ.க மாநிலப் பயிலரங்கில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், அ.தி.மு.க விலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதற்கு பா.ஜ.க காரணம் இல்லை, அது அக்கட்சியின் உள்கட்சி பிரச்சனை எனத் தெரிவித்தார். தி.மு.க-வை வீழ்த்த வேண்டுமானால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; டி.டி.வி தினகரனும் ஓ.பி.எஸ்-மும் மீண்டும் கூட்டணிக்கு வந்தால் நல்லது என்றும் கூறினார். அமித்ஷா அ.தி.மு.க-வை ஒன்றிணைக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்து, உள்துறை அமைச்சர் எவரின் உள்கட்சி பிரச்சனையிலும் தலையிடவில்லை, தினகரன் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் என்றார். டி.டி.வி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பா.ஜ.க ஒருபோதும் ஆணவமாக நடக்கவில்லை என்றும், துக்கடா கட்சி என யாரையும் பா.ஜ.க கருதுவதில்லை என்றும் வலியுறுத்தினார். ஓ.பி.எஸ், டி.டி.வி இருவரின் கருத்து வேறுபாடுகளைப் பற்றி தாம் பொறுப்பல்ல என்று தெரிவித்த நைனார், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளதால் புதிய கட்சிகள் NDA கூட்டணியில் சேர்வார்கள் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார். தி.மு.க ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் பரவல், 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார். அண்ணாமலையும் தானும் வேறு பாணியில் செயல்படுகிறோம் என்று விளக்கினார். தி.மு.க குடும்ப ஆட்சி செய்கிறது; ஆனால் பா.ஜ.க ஒருபோதும் குடும்பக் கட்சி அல்ல என்றும் கூறினார். அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவுக்கு பி.சி.சி-யில் பொறுப்பு வழங்கப்பட்டதைப் பற்றி எழுந்த விமர்சனத்திற்கு, பொன்முடியின் மகன் கிரிக்கெட் வாரியத்தில் இருப்பதை ஒப்பிட்டு பதிலளித்தார்.
Next Story