கோவை சிறப்பு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி !

X
கோவை கணபதி பகுதியில் இயங்கும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிற்க முடியாத குழந்தைகளுக்கு, ஆசிரியர் அமர்ந்தபடி நடன அசைவுகளை கற்றுக் கொடுத்தார். அதனை பின்பற்றி, குழந்தைகளும் அமர்ந்தபடியே நடனமாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு குழந்தைகளை புறக்கணிக்காமல், சமூகத்தின் ஒரு அங்கமாக ஏற்றுக்கொண்டு ஊக்குவிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். மேலும், மனவளர்ச்சி குறைபாடு, ஆட்டிசம் போன்ற பிரச்சினைகளின் காரணங்களைப் பற்றியும் மருத்துவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

