சங்கரன்கோவிலில் குடிபோதையில் வாலிபர் பெண்ணிடம் சில்மிஷம் அடி உதை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர பேருந்து நிலையம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது இங்கிருந்து ராஜபாளையம் விருதுநகர் கோவில்பட்டி சாத்தூர் திருநெல்வேலி மதுரை தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும் மேலும் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இயக்க கூடிய நகரப் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுவதாலும் பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களும் இங்கு வருகை புரிவதாலும் எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் சர்பத் கடை நடத்தி வருவதாகவும் அவர் இன்று கடை நடத்திக் கொண்டிருந்த வேளையில் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது கடைக்கு வந்த இளம்பெண் ஒருவருக்கு சர்பத் கொடுக்கின்ற போது ஆபாச வார்த்தைகளில் பேசியும் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கூச்சலிட்டு சத்தம் போடவே அருகில் இருந்த பயணிகள் அவரிடம் விவரத்தை கேட்க குடிபோதையில் இளைஞர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், மேலும் அந்தப் பெண் உடனடியாக உறவினர்களிடம் செல்போனில் தகவல் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த உறவினர்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த இளைஞரை மீட்டு விசாரணைக்காக அழைத்து சென்றனர். இளைஞரை தாக்கிய வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
Next Story

