சாலையோரம் கழிவுகள் வீச்சு - தட்டி கேட்டவருக்கு மிரட்டல் 

சாலையோரம் கழிவுகள் வீச்சு - தட்டி கேட்டவருக்கு மிரட்டல் 
X
நித்திரவிளை
குமரி மாவட்டம்  வாவறை பகுதியை சேர்ந்தவர் டென்னிசன் (47). இவர் நேற்று மாலை பைக்கில் மங்காடு கால்வாய் பகுதி வழியாக சென்றுள்ளார். அப்போது சாத்தங்கோடு பகுதியில் இருந்து வந்த ஒரு பயணிகள் ஆட்டோவில் இருந்து சாலையோரம் பிளாஸ்டிக் கவரில் கழிவுகளை வீசி சென்று உள்ளனர். இதை கவனித்த டென்னிசன் ஆட்டோவைத் துரத்தி சாலையோரம் வீசி சென்ற கழிவுகளை எடுத்துச் செல்லுமாறு கூறி உள்ளார். உடனே ஆட்டோ டிரைவர் டென்னிசனை  தகாத வார்த்தைகள் பேசி மிரட்டி விட்டு சென்றுள்ளார். இது குறித்து டென்னிசன் மங்காடு ஊராட்சித் தலைவரிடம் புகார் அளித்துள்ளார். நித்திரவிளை போலீசார் கழிவுகளை வீசி சென்ற ஆட்டோவை அந்த பகுதியில் உள்ள காவல்துறை சிசிடி கேமரா காட்சிகள் மூலம் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story