குல்லூர் சந்தை கிராமத்தில் இளைஞர் மர்மமான முறையில் படுகொலை - கொலை சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை ....*

X
குல்லூர் சந்தை கிராமத்தில் இளைஞர் மர்மமான முறையில் படுகொலை - கொலை சம்பவம் குறித்து சூலக்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை .... விருதுநகர் அருகே குல்லூர் சந்தை அருகே உள்ள மெட்டுக்குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் ( 24 ) இவருடன் பிறந்தவர்கள் அக்கா மற்றும் தம்பி என மூன்று பேர் உள்ளனர் நாகராஜன் என்பவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு அங்கு செல்வோரிடம் வம்பிழுந்ததாகவும் கூறப்படுகிறது, நேற்று மாலை நாகராஜன் வெளியில் சென்று விட்டு வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரமாகியும் நாகராஜன் வீடுதிரும்பாததால் அவரது குடும்பத்தினர்கள் தேடி வந்த நிலையில் இன்று காலை குல்லூர்சந்தை பாலம் அருகே நாகராஜன் மர்மமான முறையில் படுகொலை செய்யபட்டு கிடந்துள்ளதை கண்ட அக்கம்பத்ததினர் அவரின் குடும்பத்தார்க்கும், காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல் துறையினர் இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையை செய்தது யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

