உயிரைக் கொடுத்து எம்ஜிஆர் புகழைக் காப்பேன் நடிகர் ராமராஜன் பேட்டி

X
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராமராஜன் ரசிகர் மன்றத்தில் இருந்தால் பெண் கொடுக்கத் தயார் என போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள் என்று திரைப்பட நடிகர் ராமராஜன் பேச்சு..... ஒன்றிணைந்த அதிமுக குறித்த கேள்விக்கு எம்ஜிஆரின் புகழைக் கெடுக்க யார் முயற்சித்தாலும் எனது உயிரை கொடுத்து எம்ஜிஆரின் புகழை காப்பேன் என பேட்டி..... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ராமராஜன் தலைமை நற்பணி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார். திரைப்பட நடிகரும் முன்னாள் அதிமுக திருச்செந்தூர் மக்களவை உறுப்பினருமான ராமராஜன் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வருகை தந்தார் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் அவரது நற்பணி மன்றத்தின் தலைமை கட்டிடத்தை ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசியவர்.... ஸ்ரீவில்லிபுத்தூர் நகரப் பொறுத்த வரையில் மற்ற நடிகர்களுக்கான நற்பணி மன்றம் போல் இல்லாமல் மிகவும் கட்டுப்பாடுடன் செயல்பட்டு வருவதாகவும் இங்குள்ள தனது நற்பணி மன்றத்தில் தற்போது உறுப்பினராக சேர வேண்டும் என்றால் 60 ஆயிரம் ரூபாய் பணம் கட்டினால் தான் சேர முடியும் என்றும் அதுவும் அவர்கள் பணம் கட்டிய பின்பு விண்ணப்பித்தவரின் ஒழுக்கம் குறித்த விசாரணை நடைபெற்ற பின்பே அவரை இங்குள்ள நற்பணி மன்ற தலைவர் தாமரைக்கனி மன்றத்தில் இணைத்துக் கொள்வதாகவும் தற்போது 60 ஆயிரம் ரூபாயாக இருப்பதாகவும் வரும் அக்டோபர் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அது 70 ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட உள்ளதாக கூறினார். மேலும் இந்த ஊரை பொறுத்தவரையில் ராமராஜன் நற்பணி மன்றத்தில் ஒருவர் ரசிகராக இருந்தாலே பெண் கொடுக்க போட்டி போட்டுக் கொண்டு வருவதாக கூறினார், தொடர்ந்து தற்போதைய தமிழகத்தின் அரசியல் களம் குறித்த கேள்விக்கு தான் எம்ஜிஆர் அதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் தலைமை ஏற்று அதிமுகவில் சிறப்பாக செயல்பட்டு வந்ததாகவும் தற்போது நடைபெறும் சூழ்நிலைகள் எல்லாம் வேட்பு மனு தாக்கல் செய்யும் முன்பு கூட மாற வாய்ப்புள்ளதாக கூறினார், மேலும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கியது குறித்த கேள்விக்கு இதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் இவை அனைத்தும் எம்ஜிஆரின் புகழை கெடுக்குமேயானால் அதனைத் தான் உயிரைக் கொடுத்து எம்ஜிஆரின் புகழை காப்பாற்றுவதாக கூறினார். பேட்டி: ராமராஜன் - நடிகர்
Next Story

