சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாலை தரிசனம் ரத்து

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாலை தரிசனம் ரத்து
X
சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாலை தரிசனம் ரத்து
விருதுநகர் மாவட்டம் சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று மாலை தரிசனம் ரத்து... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கிரகணத்தை முன்னிட்டு செப்டம்பர் 7 இன்று பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலையில் தான் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று இரவு நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஞாயிற்று கிழமை மாலை தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஞாயிற்று கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, திங்கள் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story