அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு

அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்  நெல்லை மாவட்டம் இடிந்தகரை பகுதியை சேர்ந்த மெரிட்டன் (51) என்ற மீனவரின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார். தனது தாயை மெரிட்டன்  அருகில் இருந்து கவனித்து வருகிறார். அவரது மோட்டார் சைக்கிளை ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்மா உணவகம் அருகே நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது இன்று மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து  மெரிட்டன் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story