காமக்கூர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம். ஆரணி எம்எல்ஏ பங்கேற்பு.

X
ஆரணி அடுத்த காமக்கூர் ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக அட்டக்கத்தி பாலகர்கள் வழிபாடு, கோ பூஜை, பூ கோவில் அத்திப்பலகையில் இடமாகக் கொண்ட இறைவனை மீண்டுமாக நிறைகுடத்தில் எழுந்தருள் செய்தல், திருமகள் வழிபாடு, முதல் கால யாக வேள்வி பூஜை, நிறைஅவி அளித்தல், திருமுறை விண்ணப்பம், பெரு விண்ணப்பம், பேரோளி வழிபாடு, பிரசாதம் வழங்குதல், இரண்டாம் காலையாக பூஜை, கும்ப கலசம் புறப்படுதல், பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பாலபிஷேகம், மகா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆரணி எம்எல்ஏ சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டார். கோயில் நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பு வரவேற்பு அளித்தனர். உடன் ஆரணி நகர செயலாளர் அசோக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.மோகன், குமரன், எஸ்.வி.நகரம் எல்ஐசி பாபு உள்ளிட்ட பலர் இருந்தனர். ஏற்பாடுகளை காமக்கூர் கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.
Next Story

