பெரம்பலூர் மின் பொறியாளர் அலுவலகத்தை தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆய்வு
தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளரும், தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய பண்டக சாலையில் பகிர்மான மின்மாற்றிகள் மற்றும் தளவாடங்கள் பொருட்கள் இருப்பினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மின்வாரிய கோட்டத்திற்கு தேவையான மின்மாற்றிகள், தளவாட பொருட்கள் இருப்பு குறித்து பார்வையிட்டு தேவைகள் குறித்து கேட்டறிந்தேன். பருவமழைக்காலங்களில் மழை, காற்று போன்ற இயற்கை சீற்றத்தால் டிரான்ஸ்பார்மர் பழுது, மின் உயர் துண்டிப்பு, மின் விளக்கு பழுது ஏற்படுவதை நிர்வர்த்தி செய்யும் பொருட்டு ஒரு வாரத்தில் தேவையான மின்தளவாட பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உணர்த்தும் வகையில் மாநில முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். இதில் திறந்த வெளி மின் வயர்களை மூடும் பணிகள் முடிக்கிவிடப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ப மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு கிரின் பவர் காற்று மற்றும் சோலார் மூலம் மின் உற்பத்தி அதிகளவு எய்துள்ளோம். பருவமழைக்காலங்களில் இரவு நேரங்களில் சோலார் வராது, காற்று குறைவாகும் போது மின் உற்பத்தி குறையும் இதனால் மற்ற ஆலைகளில் மின் திறன் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். நெய்வேலி, கூடங்குளம், கல்பாக்கம், மேட்டூர் போன்ற பகுதிகளில் மின் உற்பத்தி அதிகரிக்கலாம். மழைக்காலங்களில் புயல், காஜா புயல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் விழுப்புரம், கடலூர் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர், துணை முதல்வர், துறை அமைச்சர், அதிகாரிக்ள, கண்காணிப்பு அதிகாரிகளால் கூட்டம் நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முன்னெச்சரிக்கையாக தேவையான மின் தளவாட பொருட்கள் உடனடியாக கொண்டு செல்லும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. மின் தடை பழுது குறித்தும், எதனால் ஏற்பட்டது, எவ்வளவு நேரத்தில் சரி செய்யலாம் என பொதுமக்களிடம் வெளிப்படையாக கூறவேண்டும். மின்வாரியம் சேவை துறை என்பதால் நிறைய குறைகளை பொதுமக்கள் கூறும்போது , மின்வாரிய அதிகாரிகள் வேதனை படாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள் 4 என்பதை 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 400 உதவி பொறியாளர் பணியிடம் நிரப்பட்டுள்ளது. பதவி உயர்வு மூலம் 500க்கு மேற்பட்டோர் எல்க்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக தேவை களப்பணியாளர்கள் தான். அரசிடம் களப்பணியாளர்கள் பணியிடத்தை நிரப்ப விரைவு படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். கேங் மஸ்தூர் பணியில் உள்ளனர். ஆயிரத்து 850 கள பணியாளர்கள் ஆயிரத்து 850 பணியிடங்கள் நிரப்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான இடங்களில் தேவையான களப்பணியாளர்களை நியமிக்க அரசிடம் வற்புறுத்தியுள்ளோம். 33 கேவி திறன் கொண்ட 133 துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 110, 230 கேவி திறன் கொண்ட 56 துணை மின்நிலையங்கள் அமைக்க டெண்டர் நிலையில் உள்ளது. ஒப்பந்த நிலையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநில முழுவதும் மின்வாரியம் பங்கு மிக முக்கியமானது, தொழிற்சாலை, விவசாயம் , பொது பயன்பாடு போன்ற பல வற்றிற்கும் மின்வாரியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம், குறைந்த அளவு மின் அழுத்தம் இல்லாமல் தரமான மின்சாரம் வழங்குவதால் பொருளாதார ரீதியில் தமிழ்நாடு வளர்ச்சியில் முன்னோடியாக உள்ளது. இதில் மின்வாரியம் ஒரு பங்கு உள்ளது. தொடர்ந்து செய்யவுள்ளோம். ஏற்கனவே 2 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இந்த ஆண்டு மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மேகலா, தலைமை பண்டக அலுவலர் தனராஜ் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story



