கோவை: சந்திர கிரகணம் - தொலைநோக்கி மூலம் கண்டு ரசிப்பு !

கோவை: சந்திர கிரகணம் - தொலைநோக்கி மூலம் கண்டு ரசிப்பு !
X
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், நேற்று நடைபெற்ற சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் கண்டு வியந்தனர்.
கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி மாணவர்கள், நேற்று நடைபெற்ற சந்திர கிரகணத்தை தொலைநோக்கி மூலம் கண்டு வியந்தனர். பள்ளி ஆசிரியர்கள் முயற்சியுடன் மேங்கோ எஜுகேஷன் அமைப்பு சார்பில் தொலைநோக்கி கொண்டு வரப்பட்டு, பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கிரகணத்தைப் பார்வையிட்டனர். மேலும், சந்திர கிரகணம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை ஆசிரியர்கள் விரிவாக விளக்கினர். புத்தகத்திலும், தொலைக்காட்சியிலும் மட்டுமே கிரகணத்தை பார்த்திருந்த மாணவர்கள், நேரடியாக கண்ட அனுபவத்தில் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் அமைப்பினருக்கும் மாணவர்கள், பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
Next Story