நாகர்கோவில் : பாதுகாப்பற்ற கழிவு நீர் ஓடை

X
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் பல மாதங்களுக்கு முன்பு கழிவுநீர் ஓடையை சீரமைக்க இரவோடு இரவாக சிலாப்புகள் அகற்றப்பட்டது. மாதங்கள் பல கடந்தும் இதுவரையிலும் எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் கழிவுநீர் ஓடை திறந்தநிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிலாப்புகள் அகற்றப்பட்டபோது காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிர்பலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சாலையின் நடுவே சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டுள்ளதால்காலை,மாலை வேளைகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி காரணமாக, ரோட்டின் ஓரமாக செல்லும் வாகனங்கள் கழிவுநீர் ஓடையில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

