சிலம்பம் பயிற்சி

X
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகில் கொண்டன்செட்டிப்பட்டியில் ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை,காமதேனு சாரிட்டிஸ் இணைந்து சிலம்பம் பயிற்சி & வில்வித்தை பயிற்சி தொடக்க விழா நடத்தப்பட்டது. இதற்கு சமூக ஆர்வலர் அருணா ஏஜென்சி உரிமையாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்,அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனரும் காமதேனு சாரிட்டிஸ் திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் டாக்டர் மருதைகலாம் முன்னிலை வகித்தார். திட்ட மேலாளர் அன்பு இன்னாசி ராஜா அனைவரையும் வரவேற்றார்,சிலம்பம் மாஸ்டர் கோபிகிருஷ்ணன் பயிற்சி அளித்தார். சிறப்பு அழைப்பாளராக கொண்டன்செட்டி,சிங்கன்செட்டிபட்டி,ராமன்செட்டிபட்டி ஊர் முக்கியஸ்தர்கள் ஆண்டிவேல்,ராம்கி,செல்வம்,முனியான்டி ஆகியோர்கள் பயிற்சியை தொடங்கி வைத்தனர்.நிறைவில் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை உறுப்பினர் திருப்பதி நன்றி கூறினார்.
Next Story

