அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட வேண்டும்

அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட வேண்டும்
X
குரு பாலபிரஜாபதி கோரிக்கை
அய்யா வைகுண்டர் பிறந்தநாளில் மதுக்கடைகள் மூட சாமிதோப்பு தலைமைப்பதி குரு பால பிரஜாபதி அடிகளார் கோரிக்கை விடுத்து கூறியிருப்பதாவது:- “பனையேறி பதநீர் இறக்குங்கள், கள் இறக்கக் கூடாது” என அறிவுரைத்தவர் அய்யா வைகுண்டர். அவரின் பிறந்த நாளில் தமிழகம் முழுவதும் ஒரு நாள் மதுக்கடைகள் மூட வேண்டும் என நான்கு ஆண்டுகளாகக் கோரியும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மகாவீரர், வள்ளலார் பிறந்த நாளில் மதுக்கடைகள் மூடப்படுகின்றன; ஆனால், ஒரு கோடி மக்கள் பின்பற்றும் வைகுண்டர் பிறந்த நாளில் மட்டும் ஏன் மூடப்படவில்லை?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
Next Story