ஆசிரியர் தின விழா

ஆசிரியர் தின விழா
X
விழா
சின்னசேலம் தமிழ்ச் சங்கம், நயினார்பாளையம் லயன் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடந்தது.தாகம்தீர்த்தாபுரம் வெல்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தாளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை முத்தமிழ் சங்கத் தலைவர் தொல்காப்பியன், கால்நடை டாக்டர் ரத்தினவேலு, சின்னசேலம் தமிழ் சங்க செயலாளர் அம்பேத்கர், நயினார்பாளையம் லயன் சங்க தலைவர் முத்தையன் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் தமிழ்ச் சங்க ஆலோசகர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சின்னசேலம் தமிழ் சங்கத்தலைவர் கவிதைத்தம்பி வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்தை ஆசிரியர் முருகன் திறந்து வைத்தார்.
Next Story