நிழற்கூடம் அமைக்க பேரூராட்சி தலைவர் பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் நிலையம் எதிரில் உள்ள ஊராட்சி ஒன்றிய உருது நடுநிலைப் பள்ளி அருகில், தமிழக அரசு பொது நிதியில் இருந்து 15 லட்சத்தில் புதியதாக பயணியர் நிழற்கூடம் அமைக்க இன்று திங்கட்கிழமை பூமி பூஜையை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் பாலக்கோடு நகர திமுக அவை தலைவர் அமானுல்லா,மத்திய ஒன்றிய துணை செயலாளார் ரவி,மேற்கு மாவட்ட மீனவர் அணி நிர்வாகிகள் மோகன், உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story




