மதுரையில் விசிக கட்சியினர் சாலை மறியல்

மதுரை அரசு மருத்துவமனையின் முன்பு விசிக கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அருகே அன்னவாசல் கிராமத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் கிரகப்பிரவேசத்திற்காக மைக் செட் போட்டுக் கொண்டிருந்த பொழுது அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பியது. காளீஸ்வரன் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உள்ளது.கொலையாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என இன்று (செப்.8) காலை மருத்துவமனை முன்பாக உறவினர்கள் மற்றும் விசிக கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர் .போலீசார் சமாதானப்படுத்தி வருகிறார்கள்.
Next Story