பொதுமக்கள் இடமிருந்து மனுக்களை பெற்றார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
பொதுமக்கள் இடமிருந்து மனுக்களை பெற்றார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகள் மற்றும் பொதுமக்கள் சார்ந்த பொது பிரச்சனைகள் குறித்த மனுக்களை இன்று மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனு குறித்து நேரடி விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story






