தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் பஸ் வசதி கோரிய மாணவிகள்

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை நகராட்சிக்குட்பட்ட அரசு காமராஜர் கலை கல்லூரி செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு காலேஜ் செல்ல முடியாமல் பள்ளி மாணவிகள் தவித்து வந்த நிலையில் இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து பஸ்களை இயக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோரிடம் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கோரிக்கை மனு வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் உத்தரவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

