பள்ளிப் பேருந்து விபத்து ஒத்திகை – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை, மருத்துவத் துறை!

பேருந்து விபத்து காட்சியை தத்ரூபமாக சித்தரித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையம், தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனையுடன் இணைந்து, பள்ளிப் பேருந்து விபத்துகளை எதிர்கொள்வது குறித்த செயல்முறை விளக்க ஒத்திகையை நடத்தியது. கருமத்தம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், பேருந்து விபத்து நிகழ்ந்தது போல காட்சி அமைத்து, குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள், முதலுதவி வழங்கும் முறை, மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற செயல்முறைகள் காட்டப்பட்டன. காவல்துறை மற்றும் மருத்துவத் துறையினர் இணைந்து நடத்திய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
Next Story