துணை ஜனாதிபதி தேர்தல் – டெல்லி புறப்பட்ட கோவை எம் பி ராஜ்குமார்!

துணை ஜனாதிபதி தேர்தல் – டெல்லி புறப்பட்ட கோவை எம் பி ராஜ்குமார்!
X
தமிழர் என்பதற்காக மட்டும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாக்களிக்க முடியாது என எம்.பி ராஜ்குமார் திட்ட வட்டம்.
துணை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கோவை எம்பிக்கள் டெல்லி புறப்பட்டனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. ராஜ்குமார், நாளைய தேர்தலில் எங்கள் வாக்குகள் அனைத்தும் இண்டி கூட்டணிக்கே செல்லும். தமிழர் என்பதற்காக மட்டும் பாஜக வேட்பாளரான ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க முடியாது. பதவி கொடுத்தும், தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வழங்காத பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முடியாது என்றார். மேலும், பெரும்பான்மையான எம்பிக்கள் பாஜக பக்கம் இருந்தாலும், வாக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு கட்சித் தலைவர்களின் முடிவை பொறுத்தே பல மாற்றங்கள் நிகழக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story