கோவை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - பரபரப்பு !

X
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது மன அமைதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் எனக் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னை நீக்கியது குறித்து காலம் தான் பதில் சொல்லும். டெல்லியில் யாரையும் சந்திக்கவில்லை, நான் காணச் செல்பவர் ராமர் மட்டுமே. கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கானோர் என்னை சந்தித்து, நான் கூறியது சரி என்று தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி தரப்பிலிருந்து அழைப்பு வந்ததா என்ற கேள்விக்கு ‘நோ கமெண்ட்ஸ்’ என்றும், பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்திக்கிறீர்களா என்ற கேள்விக்கும் பதில் இல்லை. நான் சொன்னதுக்கு மாறுபட்ட கருத்து யாரும் கூறவில்லை; எனது நிலைப்பாடு தொண்டர்களின் மனதிலும் உள்ளது என்று தெரிவித்தார்.
Next Story

