சூலூரில் காவல்துறை தினத்தை முன்னிட்டு ரத்ததானம் மற்றும் மருத்துவ முகாம்!

காவல்துறை தினத்தை முன்னிட்டு முதல்முறையாக காவல்துறையினர் சார்பில் ரத்ததானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம், சூலூரில் காவல்துறை தினத்தை முன்னிட்டு முதல்முறையாக காவல்துறையினர் சார்பில் ரத்ததானம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காவல் ஆய்வாளர் செல்வராகவன் தலைமையில் காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில், பொதுமக்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், காவல்துறையினர் என பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டனர். காவல்துறை – பொதுமக்கள் இடையேயான நெருக்கத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாமை பொதுமக்கள் பாராட்டினர்.
Next Story