சோமனூர் வாரச்சந்தையில் சாக்கடை நீர் பெருக்கு: பொதுமக்கள் அவதி !

சோமனூர் வாரச்சந்தை பகுதியில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சோமனூர் வாரச்சந்தை பகுதியில் சாக்கடை அடைப்பு காரணமாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தைக்கு அதிகாலையிலிருந்தே விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் திரண்ட நிலையில், சாலையில் நிரம்பிய கழிவுநீர் காரணமாக மக்கள் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பொதுமக்கள் சாக்கடை நீரில் தத்தளித்து சென்றதால் கடும் அவதி நிலவியது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அங்குள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story