மதுக்கரை சுங்கச்சாவடியில் திடீர் போராட்டம் !

மதுக்கரை சுங்கச்சாவடியில் திடீர் போராட்டம் !
X
சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுக்கரை சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகன உரிமையாளர்கள் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக் கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலாம்பூர்–வாளையார் இடையே உள்ள ஆறு சுங்கச்சாவடிகளில் ஐந்தில் கட்டணம் வசூல் ரத்து செய்யப்பட்ட நிலையில், மதுக்கரையில் மட்டும் தொடர்ந்ததால் உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததால் போராட்டம் வெடித்தது. தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கையை எழுத்து மூலம் அளிக்குமாறு அறிவுறுத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Next Story