பிரதமர் மோடி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பிஜேபி பயிலரங்க கூட்டத்தில் முடிவு.
பிரதமர் மோடி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பிஜேபி பயிலரங்க கூட்டத்தில் முடிவு. கரூர் மதுரை சாலையில் உள்ள பிஜேபி கட்சி அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் பயிலரங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்பி ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தார். கூட்டத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாள் வருவதை முன்னிட்டு அவரது பிறந்தநாளை மாவட்ட முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் கூறும்போது பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை வருகிற வெள்ளி சனி ஆகிய இரண்டு நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானமும் மறுநாள் ரத்த தானமும் கட்சியினர் செய்ய வேண்டும் எனவும் பிறந்த நாள் விழாவை இரண்டு வாரத்திற்கு கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Next Story





