எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் - ராமலிங்கம்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் - ராமலிங்கம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் - ராமலிங்கம் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற கொள்கை முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 25,26 ஆம் தேதி கரூருக்கு வருகை தர உள்ளார். இது தொடர்பாக கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி சின்னசாமிஉள்ளிட்ட மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதே கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பிஜேபி கட்சியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பிஜேபி மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் உலகமே போற்றும் வகையில் வழி நடத்தும் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழகத்தில் அதற்கு எதிரான மனநிலையோடு செயல்படும் அரசு உள்ளது.ஆகவே திமுகவின் ஆட்சியை கட்டாயமாக அகற்றியே வேண்டும் என்ற நிலை பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.
Next Story