தஞ்சாவூர் கல்லூரியில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழா

தஞ்சாவூர் கல்லூரியில் ஆசிரியர் தின விருது வழங்கும் விழா
X
விருது
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில், ஆசிரியர் தின விழா, விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவுக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப.சுப்பிரமணி யன், ஆராய்ச்சி புலத் தலைவர் கோ.அர்ச்சுனன், உள் தர நிர்ணயக் குழு ஒருங்கிணைப்பாளர் ல. மதுகிருத்திகா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.ரவி சிறப்புரையாற்றி, 27 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு விருதுகள், சிறப்பு பரிசுகள் வழங்கினார். முன்னதாக, உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் இரா.இராஜகுமார் வரவேற்றார். நிறைவாக, உயிர் வேதியியல் துறைத் தலைவர் வே.இராமமூர்த்தி நன்றி கூறினார். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.உஷா தொகுத்து வழங்கினார்.
Next Story