பன்னாட்டுத் தமிழ் ஆளுமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா: அமைச்சர் எம்பி பங்கேற்பு...

பன்னாட்டுத் தமிழ் ஆளுமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா: அமைச்சர் எம்பி பங்கேற்பு...
X
பன்னாட்டுத் தமிழ் ஆளுமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முப்பெரும் விழா: அமைச்சர் எம்பி பங்கேற்பு...
மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கியும், உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவி வழங்கி அழகு பார்த்தவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் பெருமிதம். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரிவை ஏற்படுத்தி ஊக்கம் அளித்தவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர் என் ராஜேஷ்குமார் பேச்சு. பன்னாட்டுத் தமிழ் ஆளுமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வரலாற்று சிறப்புமிக்க ஆணைகளை வழங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவும், கருத்தரங்க ஆய்வு நூலை வெளியிட்டு விழாவும் மற்றும் சிறப்புமிக்க ஆளுமை ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா. திமுக மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே. ஆர்.என். ராஜேஷ் குமார் தலைமையில் ராசிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் மாற்றுத்திறனாளிகள், பள்ளி ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் 102 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர். ராதாகிருஷ்ணன் 137 வது பிறந்தநாளை ஒட்டி நாமக்கல், சேலம், மதுரை, திண்டுக்கல், சென்னை, கரூர், திருப்பூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி,விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய கே. ஆர்.என். ராஜேஷ்குமார்... உடல் ஊனமுற்றோர்களை மாற்றுத்திறனாளி கள் என அழைக்க வேண்டும் என்று ஆணையைப் பிறத்தவர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் ஆட்சி செய்து வரும் மு க ஸ்டாலின் அவர்கள், அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மாவட்ட தோறும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில், மாற்றுத்திறனாளிகளுக்கு என ஒரு பிரிவை ஏற்படுத்தி விளையாட்டு போட்டிகள் கலந்து கொள்ள வழி வகை செய்தார் என்றார் இதனையடுத்து ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் பேசும் பொழுது.. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலும் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என வகையில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன பதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்றார். இந்த முப்பெரும் விழாவில் ராசிபுரம் நகர் மன்ற தலைவர் முனைவர் திருமதி ஆர். கவிதா சங்கர். நாமகிரிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டாக்டர். இரா. மாயவன், மாற்றுத்திறனாளி மாநில தலைவர் ரெ. தங்கம், நாமக்கல் நாவுக்கரசு பன்னாட்டு தமிழ் ஆளுமைகர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் பொன். கதிரேசன், மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Next Story