முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்த பெண்கள்

மதுரை மேலூரில் நேற்று பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
மதுரை மாவட்டம் மேலூர் விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஓம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் 47 ஆம் ஆண்டு ஆவணி மாத உற்சவ விழா கடந்த 6-ந்தேதி நடைபெற்றது. கோவில் முன்பு கடந்த 6-ம் தேதி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.7ஆம் தேதி அன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் நகரின் முக்கிய வீதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்று மாலை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நகரின் முக்கிய வீதிகளில் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர். கோயில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அறுசுவை அன்னதானத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அன்னதானத்தை சிறப்பு செய்தனர்.திருவிழா ஏற்பாட்டினை விஸ்வகர்மா சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story