முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள 22,140 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முன்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டம் பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 26.08.2025 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்று (08.09.2025) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 5 பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள 22,140 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முன்பதிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில், காது கேளாதோருக்கான கபடி போட்டி (இருபாலருக்கும்), உடல் ஊனமுற்றோர் கண் பார்வை குறைபாடுடையோர், அறிவுசார் இயலாதோர் மற்றும் காது கேளாதோர் பிரிவுகளுக்கான (ஆண்கள், பெண்கள்) தடகளப் போட்டிகள், குண்டு எறிதல், சக்கர நாற்காலி மேசைப்பந்து போட்டி, கண் பார்வை குறைபாடுடையோருக்கான கையுந்து பந்து போட்டி (ஆண்கள், பெண்கள்), அறிவு சார் இயலாதவருக்கான எறிபந்து போட்டி(ஆண்கள், பெண்கள்) ஆகிய போட்டிகளில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினர். இப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பாதுகாப்புடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்து, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பொற்கொடி வாசுதேவன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story