*அரசு கலை கல்லூரியில் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவர்களிடம் முறைகேடாக அபராதம் வசூலிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அ

*அரசு கலை  கல்லூரியில் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவர்களிடம் முறைகேடாக  அபராதம்  வசூலிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அ
X
*அரசு கலை கல்லூரியில் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவர்களிடம் முறைகேடாக அபராதம் வசூலிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்*
அரசு கலை கல்லூரியில் வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவர்களிடம் முறைகேடாக அபராதம் வசூலிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் 40 மாணவர்களிடம் பல்கலைக்கழக விதிமுறைப்படி வருகை பதிவேடு குறைவாக இருப்பதாக கூறி மாணவரிடமிருந்து தலா 350 முதல் 600 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கல்லூரிக்கு வருகை நாள் போதிய அளவு வருகைபதிவேடு இருந்தும் வணிகவியல் துறை மற்றும் ஆங்கிலத்துறை ஆசிரியர்கள் P. ஆனந்த் மற்றும் தனசேகர் ஆகியோர் வருகைப் பதிவு சரியாகவும் கூடுதலாகவும் உள்ள மாணவர்களிடம் 350 முதல் 600 ரூபாய் வரை ஆன்லைன் மூலம் அபராதமாக பெற்றதாக கூறப்படுகிறது . மாணவர்களிடம் அபராத தொகையாக பணத்தை பெற்றுக் கொண்டும், அந்த மாணவர்களை தேர்வு எழுத விடாமல் மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது இது குறித்து மாணவர்கள் கல்லூரி முதல்வரிடமும் புகார் அளித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மாணவர்கள் தொடர்ந்து அச்சுறுத்தும் ஆசிரியரின் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story