ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்- நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*

X
விருதுநகரில் ஜாக்டோ- ஜியோ சங்கத்தினர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்- நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமையில் திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், படித்த இளைஞர்களின் நலன் கருதி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 30 % இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் இடைநிலை, முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ,உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர் ,ஊர்ப்புற நூலகர்கள், செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் அரசு தொழில் பயிற்சி ஊழியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியத்தை வழங்கிட வேண்டும் 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை உயர்நீதிமன்ற ஆணைப்படி முறைப்படுத்திட வேண்டும், உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story

