தனியார் பள்ளி பேருந்து பின்புறம் தனியார் பேருந்து மோதி விபத்து

X
அருப்புக்கோட்டை அருகே பள்ளி பேருந்தின் பின்புறம் பக்கவாட்டில் எதிரே வந்த தனியார் பேருந்து உரசி பள்ளிப் பேருந்தின் கண்ணாடி உடைந்து பள்ளி பேருந்தில் பயணம் செய்த ஆசிரியர் உள்ளிட்ட 7 மாணவர்கள் லேசான காயத்துடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பாலவநத்தம் பகுதியில் இயங்கும் நோபல் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது சந்திரா நேஷனல் பள்ளி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே விருதுநகரிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்து பின்பகுதியில் பக்கவாட்டில் உரசி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் பின்பக்க பக்கவாட்டில் உள்ள இரண்டு கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் உள்ளே இருந்த பள்ளி ஆசிரியர் ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆசிரியர் முத்துப்பாண்டி(36), பந்தல்குடியை சேர்ந்த மாணவர்கள் வீரராஜ்(14), முகமது ஜாபர்(14), ஜெயராகுல்(14), அஸ்வின் குமார்(16) பிரதீப் கண்ணன்(16) மற்றும் அருப்புக்கோட்டை சேர்ந்த ஹரீஸ்(16) ஆகிய ஏழு பேர் கண்ணாடிகள் உரசி லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் இருந்து விரைந்து வந்த நகர் காவல் நிலைய போலீசார் ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த மாணவர்கள் மாற்று பேருந்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல தனியார் பேருந்தில் அருப்புக்கோட்டை சென்ற பயணிகள் மற்றும் மாணவர்கள் வேறு மாற்று பேருந்து வரும் வரை காத்திருந்து வேறு பேருந்தில் ஏறி சென்றனர். இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து ஓட்டுனரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்பட்டதா இல்லை வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் பள்ளி செல்லும் நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story

