ஓசூர் அருகே பிரத்தியங்கிரா கோவிலில் சிறப்பு யாகம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மோரனப்பள்ளிபகுதியில் உள்ள ராகு, கேது அதர் வண மகா பிரத்தியங்கிரா தேவி கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் இதில் வேத மந்திரங்கள் முழங்க மிளகாய் வத்தலை வேள்வி குண்டத்தில் பக்தர்கள் செலுத்தி சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனைத் தொடர்ந்து மூலவர் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தங்க கவசம் அணிவித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

