அலங்கியம் அருகே இளம்பெண் தற்கொலை

X
தாராபுரம் அருகே ரஞ்சிதாபுரத்தை சேர்ந்தவர் சபரீஷ். விவசாயி. இவரது மனைவி அஞ்சலி (வயது 32). இவர்களது மகள் ஆராதியா (4). இந்த குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். ஆனாலும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த அஞ்சலி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அஞ்சலிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
Next Story

